|   | 
        தாய்க்  காளான் வித்து தயாரிக்கும் முறை 
         
          தாய் வித்து காளான்  பூசணத்தை தானிய அடிப்படையிலான ஊடகத்தில் வைத்து வளர்ப்பதேயாகும். தமிழ்நாடு வேளாண்  பல்கலைக் கழகத்தால் சோதனை செய்யப்பட்ட பல பொருட்களில், சோளம் தான் பூஞ்சாண் வளர்வதற்கு  ஏதுவாக உள்ளது. நோயற்ற சோள தானியங்களை காளான் வித்து வளர்வதற்கான அடிப்படைப் பொருளாகப்  பயன்படுத்தப்படுகிறது. தாய்க் காளான் வித்துக்களை தயாரிப்பதற்கான முறை பின்வருமாறு  தரப்பட்டுள்ளது 
          
            
              - சோளத் தானியங்களை சுத்தமான நீரில் ஊற  வைத்து, சேதமடைந்த தானியங்களை அகற்ற வேண்டும்
 
              - சோளத்தை 30 நிமிடங்களுக்கு வேகவைக்க  வேண்டும்
 
              - வேக வைத்த தானியங்களை சமதள தரையில் பரப்பி  ஈரப்பதத்தை போக்க வேண்டும்
 
              - 50% ஈரப்பத நிலையில், கால்சியம் கார்பனேட்டை  உலர் தானியங்களுடன் 20 கிராம் / கிலோ என்ற அளவில் கலக்க வேண்டும்
 
              - கிருமி நீக்கம் செய்த பாட்டில்களில்  முக்கால் அளவு உயரத்திற்கு (சுமாராக 300 – 330 கிராம் / பாட்டில் (அ) கலன்) நிரப்பி,  பிளாஸ்டிக் வளையத்தை உட்செலுத்தி, முனைகளை உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு மூட  வேண்டும்
 
              - பஞ்சைச் சுற்றி பயனற்ற தாளைக் கொண்டு  மூடி நூலைக் கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்
 
              - இந்த பைகளை அழுத்தக் கொப்பரையில் வைத்து,  20 – எல்பி. எஸ் அழுத்தத்தில், 2 மணி நேரத்திற்கு வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
 
              - குளிர்ந்த பின், பைகளை வெளியே எடுத்து,  புற ஊதாக் கதிர் உள்ள வளர்ச்சி ஊடகத்தில் 20 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும்
 
              - பின் பூஞ்சாண் வளர்ச்சியை இரண்டு அரைப்பகுதியாக  வெட்டி, ஒரு பகுதியை பாட்டிலிலும், அடுத்த அரைப்பகுதியை அடுத்த பாட்டிலிலும் மாற்ற  வேண்டும் 
 
              - பூசண வளர்ச்சி உட்செலுத்திய பாட்டிலை  10 நாட்களுக்கு அறை வெப்ப நிலையில் வைத்து அடைகாக்க வேண்டும். இதுவே படுக்கை வித்துத்  தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
 
             
           
          குறிப்பு: கால்சியம் கார்பனேட் கலப்பதின் நோக்கம் 
          
            
              - வேகவைத்த தானியங்களில் உள்ள ஈரப்பதத்தை  அகற்ற 
 
              - தானியங்களின் கார அமிலத் தண்மையை நடுநிலைப்  படுத்த
 
              - கிருமி நீக்கம் செய்தபின் கட்டியாவதைத்  தடுக்க 
 
             
           
          
            
              
                 | 
               
              
                வெள்ளை சோளத் தானியங்கள் 
                  | 
               
              
                 | 
               
              
                வேகவைத்தல் (30 நிமிடங்கள்) 
                  | 
               
              
                 | 
               
              
                 | 
               
              
                 | 
               
              
                கால்சியம் கார்பனேட்  (20 கிராம் / கிலோ) கலக்குதல் 
                  | 
               
              
                 | 
               
              
                பிளாஸ்டிக் வளையங்கள் 
                  | 
               
              
                காளான் வித்துப்பைகள்  தயாரித்தல்  | 
               
              
                 | 
               
              
                நிலை – 1 
                  | 
               
              
                 | 
               
              
                நிலை – 2 
                  | 
               
              
                 | 
               
              
                நிலை – 3 
                  | 
               
              
                 | 
               
              
                தானியங்களை பைகளில்  நிறைத்தல் 
                  | 
               
              
                 | 
               
              
                பிளாஸ்டிக் வளையங்கள்  கொண்டு இறுக்குதல்  
                  | 
               
              
                 | 
               
              
                உறிஞ்சும் தன்மையற்ற  பஞ்சைக் கொண்டு அடைத்தல்  
                  | 
               
              
                 | 
               
              
                தாளைக் கொண்டு மூடி,  நூலைக் கொண்டு கட்டுதல்  
                  | 
               
              
                 | 
               
              
                தட்டுக்களில் சேமித்தல்  | 
               
             
           
          முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் 
          
            
              - சோளத்தை அளவுக்கு அதிகமாக வேக வைக்க  கூடாது. இல்லையென்றால், தானியங்கள் பிரிந்து விடும்
 
              - கால்சியம் கார்பனேட்டை பரிந்துரைக்கப்பட்ட  அளவே பயன்படுத்த வேண்டும்
 
             
           
          
            
           | 
          |